» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 25ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

திங்கள் 20, நவம்பர் 2023 3:55:50 PM (IST)

தூத்துக்குடியில் வருகிற 25ஆம் தேதி தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  கலைஞர்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  இணைந்து, வேலை தேடும் இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் சிறப்பு தனியார்துறை  வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  25.11.2023 அன்று காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில்  தூத்துக்குடி  மாவட்டம்   மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும்  150-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க   உள்ளனர்.   இந்த மாபெரும் தனியார்துறை  வேலைவாய்ப்பு   முகாமில்   8-ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரி, >  B.E, Diploma, Nursing, ITI  படித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம். 

இம்முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் தங்களது பணிக்காலியிடங்கள் தொடர்பான விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 21.11.2023 தேதி மாலை 04.00 மணிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும் இம்மின்னஞ்சலில் அனுப்பும் நிறுவனங்களுக்கு CONFIRMATION MAIL அனுப்பப்படும். இந்த முகாம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிய Thoothukudi Employment office என்ற  Telegram channel-ல் இணையவும். அதன் உள் நுழைந்து Join என்பதனை  click  செய்து  எளிதில்   channel-ல்  இணையலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் "தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் "Tamil Nadu Private Job Portal”  (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்துகொள்ளுமாறும், கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டால் வேலைநாடுநர்கள் வேலைவாய்ப்பு  பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,   தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

உண்மைNov 22, 2023 - 11:20:58 AM | Posted IP 162.1*****

திராவிட ஆட்சியில் இனி அரசு வேலை கிடைக்க வாய்ப்பில்லை

SELVAKUMAR TNov 22, 2023 - 09:08:37 AM | Posted IP 172.7*****

Good

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory