» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசேகரபட்டினம் கிளை நூலகத்திற்கு விருது : அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்!

திங்கள் 20, நவம்பர் 2023 3:24:58 PM (IST)தூத்துக்குடி மாவட்டம்,குலசேகரப்பட்டணம் கிளை நூலகத்திற்கு சிறந்த நூலகத்திற்கான எஸ்.ஆர் அரங்கநாதன் விருதினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.

ஒவ்வொருவருடமும் நவ-14 முதல் 20ம் தேதி வரை தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்பட்டு அதில் சிறந்த நூலகர்,சிறந்த நூலகங்களுக்கு நூலக தந்தை எஸ்.ஆர். அரங்கநாதனின் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. தமிழக நூலகத் துறையின் சார்பில்தேசிய நூலக வார விழா சீர்காழியில் நடந்தது.

இதில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் கிளை நூலகம் சிறந்த நூலகமாக தேர்வு செய்யப்பட்டு எஸ்.ஆர் அரங்கநாதன் விருதினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நூலகர் மாதவனிடம் வழங்கினார்.விருது பெற்ற நூலகரை நூலகத்துறை இயக்குனர் இளம் பகவத்,தூத்துக்குடி மாவட்ட நூலக அலுவலர் ரங்கநாயகி,திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம்,தூத்துக்குடி மாவட்ட மைய நூலகர் ராம்சங்கர், நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் உட்பட பலர்பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory