» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வானிலை எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை!

திங்கள் 20, நவம்பர் 2023 12:13:46 PM (IST)

வானிலை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. 

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து. இந்த மழை நேற்று இரவு வரை தொடர்ந்தது.  வானிலை மையம் எச்சரிக்கை காரணமாக இன்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இனிகோ  நகர், புதிய துறைமுகம் ஆகிய மீனவ கிராமங்களில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள்  மற்றும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி  தொழிலுக்கு செல்லவில்லை. 265 விசைப் படகுகளை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory