» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 156 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைப்பு
ஞாயிறு 19, நவம்பர் 2023 9:12:06 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 156 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 21.10.2023 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், உழவர் சந்தை அருகில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் தூத்துக்குடி ஆறுமுகநேரி, பாரதிநகரை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன்களான செல்வராஜ் (எ) செல்லக்குட்டி (28) மற்றும் சின்னதம்பி (26) ஆகியோரை வடபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரிகளான செல்வராஜ் (எ) செல்லக்குட்டி மற்றும் சின்னதம்பி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பிரேம் ஆனந்த் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கோ. லட்சுமிபதி இ.ஆ.ப அவர்கள் தூத்துக்குடி ஆறுமுகநேரி, பாரதிநகரை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன்களான செல்வராஜ் (எ) செல்லக்குட்டி மற்றும் சின்னதம்பி ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பிரேம் ஆனந்த் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.
இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 எதிரிகள் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 30 எதிரிகள் உட்பட 156 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாண் திட்டத்திற்கு ரூ.34 கோடி கடன் வழங்க இலக்கு : ஆட்சியர் தகவல்!
வியாழன் 30, நவம்பர் 2023 10:38:42 AM (IST)

தூத்துக்குடியில் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது!
வியாழன் 30, நவம்பர் 2023 10:22:17 AM (IST)

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வைரவிழா வட்டக் கிளை மாநாடு
வியாழன் 30, நவம்பர் 2023 9:58:12 AM (IST)

மக்கள் களம் நிகழ்ச்சியில் ரூ.35லட்சம் நலதிட்ட உதவிகள்: கனிமொழி எம்பி வழங்கினார்.
வியாழன் 30, நவம்பர் 2023 8:33:34 AM (IST)

சேவைக் குறைபாடு : ஒப்பந்தகாரர் ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
வியாழன் 30, நவம்பர் 2023 8:27:49 AM (IST)

மேல்மருவத்தூர் இருமுடி திருவிழாவிற்கு தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதி
வியாழன் 30, நவம்பர் 2023 8:15:57 AM (IST)
