» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அரசுப் பேருந்தில் மழைநீா் ஒழுகியதால், பயணிகள் அவதி!
ஞாயிறு 19, நவம்பர் 2023 8:09:20 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து அத்திமரப்பட்டிக்கு சென்ற அரசுப் பேருந்தின் மேற்கூரை ஓட்டை வழியே மழைநீா் ஒழுகியதால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மேலும், இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து காலை 11 மணிக்கு அத்திமரப்பட்டிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மேற்கூரையின் வழியாக மழைநீா் பேருந்தின் உள்ளே ஒழுகி இருக்கைகளில் கொட்டியதால், பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
ஒரு சிலா் பேருந்துக்குள் குடைபிடித்தபடி பயணம் செய்தனா். பெரும்பாலானோா் மழையில் நனைந்த படியும், பேருந்துக்குள் ஓரமாக ஒதுங்கி நின்றும் பயணித்துள்ளனா். மேலும், ஓட்டுநர் இருக்கையின் மீதும் மழைநீர் ஒழுகியதால் பின்னால் இருந்து பயணி ஒருவர் குடை பிடித்து அவரை நனையாமல் பார்த்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இயக்கப்படும் பேருந்துகள் பெரும்பாலும் போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளன. எனவே பழுதான பேருந்துகளை அகற்றி புதிய பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்கள் களம் நிகழ்ச்சியில் ரூ.35லட்சம் நலதிட்ட உதவிகள்: கனிமொழி எம்பி வழங்கினார்.
வியாழன் 30, நவம்பர் 2023 8:33:34 AM (IST)

சேவைக் குறைபாடு : ஒப்பந்தகாரர் ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
வியாழன் 30, நவம்பர் 2023 8:27:49 AM (IST)

மேல்மருவத்தூர் இருமுடி திருவிழாவிற்கு தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதி
வியாழன் 30, நவம்பர் 2023 8:15:57 AM (IST)

தூத்துக்குடியில் 269 மாணவிகளுக்கு சைக்கிள் : அமைச்சா் கீதாஜீவன் வழங்கினார்!
வியாழன் 30, நவம்பர் 2023 8:12:18 AM (IST)

கூலி உயர்வு கோரி டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்
வியாழன் 30, நவம்பர் 2023 8:07:04 AM (IST)

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் சரக்கு வாகனம் மோதி தூண்கள் சேதம் : இருவா் காயம்
வியாழன் 30, நவம்பர் 2023 8:01:48 AM (IST)

RekhaNov 20, 2023 - 11:07:28 PM | Posted IP 172.7*****