» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 4பேர் கைது!

ஞாயிறு 19, நவம்பர் 2023 2:11:32 PM (IST)

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்து, 1200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையிலான போலீசார் நேற்று (18.11.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது தூத்துக்குடி திருச்செந்தூர் ரோடு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

இதில், தூத்துக்குடி கணேஷ் நகரை சேர்ந்த மூர்த்தி மகன் ராஜபாண்டி (24), தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் கண்ண பெருமாள் (24), தூத்துக்குடி காந்திநகரைச் சேர்ந்த ஜெனோரிஸ் மகன் கர்லின் (24) மற்றும் திருநெல்வேலி பேட்டை, காமராஜ் நகரைச் சேர்ந்த முகமது அலி மகன் ஷானவாஷ் (23) ஆகியோர் என்பதும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே போலீசார் ராஜபாண்டி, கண்ண பெருமாள், கர்லின் மற்றும் ஷானவாஸ் ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 1200 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ராஜபாண்டி மீது ஏற்கனவே சிப்காட் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உட்பட 6 வழக்குகளும், தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 6 வழக்குகள் என 12 வழக்குகளும்,

கண்ண பெருமாள் மீது வடபாகம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும்,   கர்லின் மீது தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 4 வழக்குகள் என 5 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து

ஞானமுத்துNov 19, 2023 - 11:39:31 PM | Posted IP 172.7*****

நம்புற மாதிரி கதை சொல்லுங்க சாரே, காக்கி கூட்டத்துல இருக்குற கறுப்பு ஆடுகளுக்கு தெரியாம சிட்டிக்குள்ள யாரும் கஞ்சா விக்க முடியாது சாரே...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham HospitalThoothukudi Business Directory