» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அக்.5ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

செவ்வாய் 3, அக்டோபர் 2023 12:37:35 PM (IST)

தூத்துக்குடியில் வருகிற 5ஆம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி நகர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தூத்துக்குடி பீச் ரோடு துணை மின்  நிலையத்தில்  வருகிற 5ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9  மணி முதல் மாலை 4:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக இனிகோ நகர், ரோச் காலனி, சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், மத்திய கடற்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச் ரோடு, லயன்ஸ்டவுன், தெற்கு காட்டன் ரோடு, சுனோஸ்காலனி, செயின்ட் பீட்டர் கோவில் தெரு, தெற்கு எம்பரர் தெரு, மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, பெரியகடை தெரு, ஜார்ஜ் ரோடு, கணேசபுரம், பாத்திமாநகர், இந்திராநகர், புல்தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகர், பனிமயநகர், தாமோதரநகர், வண்ணார்தெரு, பெருமாள் தெரு, சிவந்தாகுளம் ரோடு, சண்முகபுரம் பிராப்பர், சந்தை ரோடு, காந்திநகர், மேலசண்முகபுரம் 2-வது தெரு, மற்றும் அதனை சுற்றி உப்பள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது  என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital











Thoothukudi Business Directory