» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கார் மோதி முதியவர் பலி: டிரைவர் கைது
செவ்வாய் 3, அக்டோபர் 2023 11:05:01 AM (IST)
தூத்துக்குடியில் சாலையை கடக்க முயன்றபோது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மறவன் மடம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் தங்கராஜ் (70). இவர் நேற்று இரவு 8 மணியளவில் தூத்துக்குடி - பாளை., மெயின் ரோட்டை கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப் பதிந்து, காரை ஓட்டி வந்த தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த அய்யசாமி மகன் முத்துகுமார் (42), என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.