» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு!

வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:24:58 PM (IST)விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்வின்போது மருத்துவமனையில் உள்ள வெளி நோயாளிகள் பிரிவு, மருந்தகம், சமையல் கூடம், மருத்துவமனை வளாகம், அறுவை சிகிச்சை அரங்கு என எல்லா இடங்களிலும் ஆய்வு செய்தார் மற்றும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் கலந்துரையாடினார் இதைத் தொடர்ந்து விளாத்திகுளம் மருத்துவ அலுவலர் சுரேஷ்குமாரிடம் மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகளின் எண்ணிக்கை, அளிக்கப்படும் சிகிச்சை, விவரங்கள் குறித்தும், இங்குள்ள மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் காலி பணியிடங்கள், தேவையான மருத்துவ உபகரணங்கள் புதிய கட்டிட வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார் பின்பு அனைத்தும் செய்து தரப்படும் என்று கூறினார்.

மேலும், இந்த மருத்துவமனையில் 30 ஆண்டுகள் பழமையான எக்ஸ்ரே இயந்திரம் செயல்படாமல் இருப்பதைக் கண்டு உடனடியாக சென்னை டி எம் எஸ் அலுவலகத்திற்கு செல்போன் மூலம் அழைத்து இங்குள்ள எக்ஸ்ரே இயந்திரம் செயல்படாமல் உள்ளது உடனடியாக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு எக்ஸ்ரே இயந்திரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன், பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅயன்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராமசுப்பு , ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல், ஆகியோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham HospitalThoothukudi Business Directory