» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவி உட்பட 3பேரை மண்வெட்டியால் தாக்கி கொல்ல முயன்றவர் கைது!
திங்கள் 18, செப்டம்பர் 2023 11:19:36 AM (IST)
ஸ்ரீவைகுண்டம் அருகே குடும்பத் தகராறில் மனைவி, மாமியார் உட்பட 3பேரை மண்வெட்டியால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள அடைக்கலாபுரம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் மனைவி மங்களகனி (45). இவரது கணவர் 22 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதையடுத்து மீனாட்சிபட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் முருகேசன் (45) என்பவருடன் கடந்த 15ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மங்களகனி தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். இந்நிலையில் நேற்று காலை முருகேசன் அவரை அழைக்கச் சென்றுள்ளார். அப்போது மங்களகனி வர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த முருகேசன் மண்வெட்டியால் அவரை தாக்கியுள்ளார்.
இதனை தடுக்க முயன்ற மங்களகனியின் தாயார் ஞானம்மாள் (65), மகன் ஜேக்கப் (24) ஆகியோரையும் முருகேசன் மண்வெட்டியால் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த மூவரும் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் கொலைமுயற்சி வழக்குப்பதிந்து முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மேயருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:23:02 PM (IST)

சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை சார்பில் இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:16:24 PM (IST)

பெண் குழந்தைகளைக் காப்போம் பயிலரங்கம் : எஸ்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:37:35 PM (IST)

தூத்துக்குடியில் செவிலியர் கல்லூரி தொடங்க வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் கோரிக்கை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:29:00 PM (IST)

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:24:58 PM (IST)

அரியநாயகிபுரம் பள்ளியில் புதிய வகுப்பறைகள் அடிக்கல் நாட்டு விழா!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:20:28 PM (IST)
