» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அம்மா உணவகத்தில் சாம்பார் சாதத்தில் பாம்பு அரணை : தூத்துக்குடியில் பரபரப்பு!

ஞாயிறு 17, செப்டம்பர் 2023 9:11:01 AM (IST)தூத்துக்குடி அம்மா உணவகத்தில் வாங்கிய சாம்பார் சாதத்தில் பாம்பு அரணை கிடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

தூத்துக்குடி ராஜீவ்நகரை சேர்ந்தவர் சரவணன். எல்.ஐ.சி. ஏஜெண்டான இவர் உடல்நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்தார். நேற்று சிகிச்சை முடிந்து வீட்டிற்கு புறப்பட்ட சரவணன் மருத்துவமனைக்கு அருகே உள்ள அம்மா உணவகத்தில் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் 4 சாம்பார் சாதத்தை டிபன் பாக்சில் பார்சல் வாங்கி சென்றார்.

வீட்டிற்கு சென்று தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சாம்பார் சாதத்தை சரவணன் சாப்பிட்டார். அப்போது சாதத்தில் நீளமாக பீன்ஸ் போல் ஒன்று தட்டப்பட்டுள்ளது. உடனே அதை எடுத்து பார்த்த போது அது இறந்த நிலையில் கிடந்த பாம்பரணை என்று தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் 2 முறை வாந்தி எடுத்தார். 

தொடர்ந்து அவர் பாம்பரணை கிடந்த சாம்பார் சாதத்துடன் அம்மா உணவகத்திற்கு வந்தார். ஆனால் அம்மா உணவகம் மூடப்பட்டு இருந்ததால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், சரவணனிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும், சாதத்தில் பாம்பரணை கிடந்தது உண்மை தானா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory