» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சனாதானம் குறித்து நான் பேசியதில் தவறில்லை : தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

திங்கள் 4, செப்டம்பர் 2023 7:59:26 PM (IST)சனாதானம் குறித்து நான் பேசியதில் தவறில்லை பேசக்கூடாது என்றால் திரும்ப திரும்ப பேசுவேன் என்று தூத்துக்குடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த தமிழக விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜூவன்,மற்றும் தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில்ராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலாஜி சரவணன் ஆகியோர் சார்பில் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில். சனாதனம் குறித்து நான் பேசியதில் தவறில்லை நான் பேசியதில் தவறு இல்லாத போது அமைச்சர் எதற்கு ராஜினாமா செய்ய வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிவிற்கு பதில் அளித்த அவர், சனாதனத்தில் பெண்கள் அடிமையாக வைக்கப்பட்டிருந்தார்கள் கணவன் இறந்தால் உடன்கட்டை ஏற வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தது திராவிட மாடலில் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

காலை உணவு திட்டம் பெண்களுக்கான புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் ஆட்சி கொண்டு வந்துள்ளது. அனைத்து மதங்கள் குறித்தும் பேசினேன் இந்து மதம் குறித்து மட்டும் பேசவில்லை. பெண்களை அடிமைபடுத்தி கொண்டிருந்தார்கள் . படிக்க அனுப்ப வில்லை. பேசக் கூடாது என்றால் திரும்ப நான் திரும்ப பேசுவேன். நான் பேசினால் பலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்படும் என பேசும்போதே கூறினேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

Hindu Sanathana DarmaSep 5, 2023 - 02:05:19 PM | Posted IP 162.1*****

Arambamum alivum atrathu hindu sanathana darmam.... athai yaralum alikkamuiyathu.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory