» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் கலைஞரின் 100-வது பிறந்தநாள் விழா!
சனி 3, ஜூன் 2023 3:14:07 PM (IST)
நாசரேத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 100-வது ஆண்டு பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஆழ்வார்திருநகரி மத்திய ஓன்றிய செயலாளர் நவீன்குமார் தலைமை தாங்கினார். நாசரேத் பேரூர் கழக செயலாளர் ஜமீன்சாலமோன், நகர அவைத் தலைவர் கருத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அவை தலைவர் அருள்ராஜ், செல்லத்துரை, நகரதுணை செயலாளர் ஜேம்ஸ், மாரிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கே.வி.கே.சாமிசிலை அருகில், பேரூந்து நிலையம், சந்தி ஆகிய மூன்று இடங் களில் கலைஞரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதே நேரத்தில் மூன்று இடங்களிலும் ஒரிசாவில் ரயில் விபத்தில் இறந்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. திருமறையூர் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் பேரூர் கழக செயலாளர் ரவி செல்வகு மார், கவுன்சிலர்கள் சாமு வேல்,அதிசயமணி,ஒன்றிய பிரதிநிதிகள் ஹரிஸ்ரவி, தேவதாஸ், மாணிக்கராஜ், ராமசந்திரன், ஞானராஜ் மற்றும் வார்டு செயலாளர் கள் உடையார், மாற்கு தர் மக்கண், ஜேம்ஸ்ரவி, மாற்கு ஜாண்சன்,சரவணன், சேகர், மனோகரன், இளங்கோ, சிலாக்கியமணி, ஜெபசிங், அகஸ்டின்,ஜாண் பெனிசன், நகர தொழில்நுட்ப அணி செயலாளர், நகர இளைஞ ரணி அமைப்பாளர் பிரதிப் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் இந்திராணி, நகர மகளிரணி கஸ்தூரி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.