» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கலைஞர் 100வது பிறந்தநாள்: மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மேயர் தொடங்கி வைத்தார்!

சனி 3, ஜூன் 2023 11:23:56 AM (IST)



தூத்துக்குடியில், கலைஞரின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மில்லர்புரம், உப்பாத்து ஓடை, தாளமுத்துநகர், புஷ்பாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராம்நகரில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடத்தில் மாநகராட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100வது பிறந்தநாளையொட்டி பல்வேறு வகையான 300 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். முன்னதாக மேயர் தலைமையில் தூய்மை உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மண்டலத் தலைவர்கள் கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், சிறுபான்மை பிரிவு துணைச்செயலாளர் அந்தோணி, கவுன்சிலர்கள் சுப்புலட்சுமி, ரெங்கசாமி, வைதேகி, மரியகீதா, ஜெபஸ்டின் சுதா, மகேஸ்வரி, விஜயலட்சுமி, ஜெயசீலி, பவாணி மார்ஷல், முன்னாள் கவுன்சிலரும் வட்டச்செயலாளர் ரவீந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் பிரின்ஸ், ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்க் ஹரிகணேஷ், ஸ்டாலின் பாக்கியநாதன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் பிரபாகர், ஜோஸ்பர், லிங்கராஜா, குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அக்.18ல் காளி வேட ஊர்வலம்!

வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:46:08 PM (IST)

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory