» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மேலூர் ரயில் நிலையம் அருகில் புதியசாலை : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!

புதன் 31, மே 2023 2:43:46 PM (IST)



தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் வரும் பயணிகளின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்  கே.வி.கே நகர் கீழ்ப்பகுதியில் இரண்டு சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி. கீதாஜீவன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேலூர் ரயில் நிலையத்தை இன்று பார்வையிட்டார். அந்த ரயில் நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகள் செல்வதற்காக ரயில் நிலையத்தின் தென்பகுதியில் இருந்து பயணிகள் இறங்குவதற்கு வசதியாக புதிய படிக்கட்டுகள் அமைக்கவும், பொதுமக்கள் ரயில் நிலையத்திற்கு வந்து செல்வதற்கு வசதியாக கே.வி.கே நகர் பகுதியில் கிழமேல் மற்றும் தென் வடல் சாலைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

ஆய்வின்  போது, ரயில் தென்னக ரயில்வே துணை திட்ட பொது மேலாளர் சரவணன், தூத்துக்குடி ரயில்வே மேலாளர், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசே கரன் உட்பட பலர் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory