» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பழக்கடையில் பணம் திருடிய வாலிபர் கைது

வெள்ளி 26, மே 2023 7:42:23 AM (IST)

தட்டார்மடத்தில் பழக்கடையில் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் ரஸ்தா தெருவை சேர்ந்தவர் மரிய சார்லஸ் (50). இவர் சாத்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் பழக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம் போல் கடையை பூட்டுவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

உடனே உள்ளே சென்று பார்த்தபோது, ரூ.2 ஆயிரத்தை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மரிய சார்லஸ் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினராஜ் விசாரணை நடத்தியதில், பாளையங்கோட்டை கோட்டூரை சேர்ந்த இசக்கி மகன் கார்த்தீசன் (22) இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து

திருட்டுமே 26, 2023 - 03:22:21 PM | Posted IP 162.1*****

பரம்பரை நபரா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory