» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி அலட்சியத்தால் வியாபாரி பலி: நிவாரணம் வழங்க கோரிக்கை!

வியாழன் 25, மே 2023 9:46:15 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வியாபாரியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் அருகில் அண்ணா சிலை உள்ளது. இந்த சிலையை சுற்றிலும் வட்டமாக இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா சிலை ரவுண்டானாவை சுற்றிலும் கீரை வியாபாரிகள் தினமும் காலை 5 மணியில் இருந்து 10 மணி வரை கீரை விற்பார்கள். இன்று காலை 6 மணிக்கு தூத்துக்குடி மடத்தூரைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் ஜெயகணேசன் (42) வழக்கம்போல கீரை மூடையை அவிழ்த்து கீழே சாக்கை விரித்து கீரையை வியாபாரத்திற்காக பரப்பி வைத்து விட்டு அந்த இரும்பு கம்பி வேலியில் சாய்ந்திருக்கிறார். 

அந்த இரும்பு கிரிலில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்திருக்கிறது. இதை அறியாமல் அதில் சாய்ந்த ஜெயகணேசன் அந்த இடத்திலேயே மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அண்ணா சிலையை சுற்றிலும் இரும்பு கிரில்லில் இரவில் ஒளிரக்கூடிய 4 ஹாலாஜன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த விளக்கு பொருத்தப்பட்டுள்ள இடத்தின் மின்சார வயர்களை உரிய முறையில் பராமரிக்காமல் இருந்ததினால்தான் இரும்பு வேலி முழுவதும் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. 

மாநகராட்சியின் இந்த அலட்சிய போக்கினால் அன்றாடம் உழைத்து சாப்பிடும் ஒரு அப்பாவி கீரை வியாபாரியின் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளது. கடும் வெயில் நேரத்தில் இந்த நிலை என்றால், இன்னும் மழை காலங்களில் எந்தெந்த இடங்களில் என்னென்ன நிலையோ? இறந்து போன ஜெயகணேசனுக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். அந்த குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மாநகராட்சியில் ஜெயகணேசன் மனைவிக்கு வேலையும் வழங்க வேண்டும் என சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory