» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை: ஆட்சியர் தக‌வல்!

வியாழன் 25, மே 2023 7:50:35 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், வேப்பலோடை, நாகலாபுரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் 2023 ஆம் ஆண்டுக்கான  சேர்க்கை 24.05.2023 முதல் 07.06.2023 வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

சேர விரும்புவோர் 8-ஆம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் சாதிச் சான்றிதழ், 5 பாஸ்போட் சைஸ் போட்Nடா, ஆதார் கார்டு மற்றும் அசல் சான்றிதழ்களின் நகல்கள் கொண்டு வந்து தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம.

மேலும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ/மாணவிகளுக்கு தமிழக அரசால் மாதந்தோறும் உதவித் தொகைரூ.750/- (வருகை நாட்களுக்கு ஏற்ப),  கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், சீருடை, காலணி – ஒரு செட், பயிற்சிக்கு தேவையான நுகர்பொருட்கள் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி நிலைய துணை இயக்குநர்/முதல்வரை 9499055810 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory