» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்தியாவில் இருந்து மாலத்தீவிற்கு நேரடி கப்பல் சேவை: தூத்துக்குடியில் துவக்கம்!!

வெள்ளி 5, மே 2023 3:34:55 PM (IST)



தூத்துக்குடியில் மாலத்தீவிற்கு நேரடி கப்பல் சேவையை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வைத்து இந்தியாவிலிருந்து மாலத்தீவிற்கு நேரடி கப்பல் சேவையை கொடி அசைத்து துவக்கி மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் இன்று வைத்தார். விழாவில் அவர் பேசுகையில் "இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு இக்கப்பல் சேவை மேலும் ஒரு மைல்கல்லாக அமையும் என்று குறிப்பிட்டார். 

மேலும் இக்கப்பல் சேவை இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் மாலத்தீவு மற்றும் இந்திய மக்களிடையே நல்உறவினை மேம்படுத்துதற்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறினார். இந்த முதல் பயணத்தின் போது 421 டி.இ.யு சரக்குபெட்டகங்களை எடுத்துச் செல்லும் திறன் மற்றும் மொத்த சரக்குகளை எடுத்துச் செல்லும் வசதி கொண்ட எம்.எஸ்.எஸ். கலேனா என்ற இக்கப்பல் 270 டி.இ.யு சரக்குபெட்டகங்களை தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து மாலத்தீவிற்கு எடுத்து செல்கிறது. இந்த கப்பல் இன்று தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு வரும் 7ஆம் தேதி மாலே துறைமுகத்தை சென்றடையும். 

விழாவில் வ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர்  தா.கி. ராமச்சந்திரன், தனது உரையில் "வ.உ.சிதம்பரனார் துறைமுகம் குறைந்த செலவில் நிறைந்த சேவைகளை வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளது என்று கூறினார். மேலும் அவர் இந்தியாவிற்கும் மாலத்திற்கும் இடையேயான இரு தரப்பு வர்த்தகம் 323.9 மில்லியன் அமெரிக்கா டாலர்களாக அதிகரித்துள்ளது மற்றும் இரு நாடுகளின் வர்த்தக சமூகத்தை இணைப்பதில் இந்தியா, மாலத்தீவு இடையேயான நேரடியான இச்சேவை முக்கிய பங்கு வகித்துள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். இந்தியா, மாலத்தீவின் 3வது பெரிய வர்த்தக பங்காளியாவதோடு நம்பகமான கடல் வர்த்தக போக்குவரத்து இணைப்பு சர்வதேச வர்த்தகம் மற்றும் வணிகத்தை மேலும் மேம்படுத்தும் என்று கூறினார்.

மேலும் இந்திய கப்பல் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கேப்டன் பி.கே. தியாகி தனது உரையில், "இந்திய கப்பல் கழகம் மூலம் இயக்கப்படும் இந்த சரக்குபெட்டக சேவை, பாரதபிரதமர் நரேந்திர மோடி 2019-ஆம் ஆண்டு ஜீன் மாதம் தனது மாலத்தீவு பயணத்தின் போது அளித்த உறுதி மொழியை உறுதியுடன் நிறைவேற்றும் வண்ணம் இச்சேவை துவக்கப்பட்டுள்ளது. இக்கப்பல் சேவையை இந்திய கப்பல் கழகம் மாதத்திற்கு 3 முறை இயக்கப்படும் இச்சேவையின் மூலம் குறைந்த செலவில் சரக்குகளை நேரடியாக இந்தியாவிலிருந்து மாலத்தீவிற்கு எடுத்து செல்ல முடியும்.

இந்நிகழ்வில் மாலத்திவிற்கான இந்திய உயர் ஆணையர் முனு மஹவர், மாலத்தீவு போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்திற்கான இணை அமைச்சர் அகமது சூஹைர், மாலத்தீவு போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து துணை அமைச்சர் ஹமாத் அப்துல் காண், இந்தியாவிற்கான மாலத்தீவு உயர் ஆணையர் இப்ராஹிம் ஷாஹீப், மாலத்தீவு இணை துறைமுகங்கள் கேப்டன் முகமது நாஜீம் ஆகியோர் மாலத்தீவிலிருந்து காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனார்கள்.


விழாவில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய துணைத் தலைவர் பீமல்குமார் வரவேற்புரை ஆற்றினார். துறைமுக நிர்வாக குழு ஆணையர், சங்கத் துறை, உறுப்பினர்கள் கே.வி.வி.ஜி. திவாகா, தூத்துக்குடி, உயர் அதிகாரிகள், கப்பல் போக்குவரத்து கழகம், துறைமுக உபயோகிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

muralidharanpalaniappanமே 9, 2023 - 10:19:30 AM | Posted IP 162.1*****

good Appreciate.same to develop in other Tamilnadu ports&Tuticorin expansion projects in port development for quick&better business growth for future orientation.

ஜான் செல்வராஜ்மே 7, 2023 - 07:11:31 PM | Posted IP 162.1*****

வாழ்த்துகள் தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்பட வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads











Thoothukudi Business Directory