» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மூத்த எழுத்தாளர் கலாபன் வாஸ் நூல் வெளியீட்டு விழா

ஞாயிறு 2, ஏப்ரல் 2023 11:50:58 AM (IST)



தூத்துக்குடியில்  மூத்த எழுத்தாளர் கலாபன் வாஸ் பிறந்தநாள் விழா உட்பட முப்பெரும் விழா நடைபெற்றது. 

தூத்துக்குடி JMJ மண்டபத்தில் மூத்த எழுத்தாளர் கலாபன் வாஸ் பிறந்தநாள் விழா, நான்கு நூல்கள் வெளியீடு, மாணாக்கருக்குக் வலம்புரியார் நினைவு கல்வி நிதியுதவி வழங்கல், பள்ளி மாணவர்களுக்குத் தேர் மாறன் சீருடை திட்டத்தின் கீழ் சீருடை வழங்கல் என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்குத் தொழிலதிபர் எ.வி. லினோ தலைமை தாங்கினார். புன்னைக்காயல் ஊர்த்தலைவர் எட்வின், ஆசிரியர் குரூஸ் விக்பர்ட், கடலோர ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் ஜோசப் சைமன் ஜூட்ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பனிமய மாதா பேராலய அதிபர் குமார் ராஜா ஆசியுரை வழங்கி, விழா நாயகர் கலாபன் வாசுக்குப் பரிசளித்தார். கலாபன் வாஸ் எழுதிய இரண்டு நூல்களில் முக்கனி அமுதம் நூலை ஆசிரியை ஒடிலியா தேன்மொழி வாஸ் வெளியிட, ஆசிரியர் பிரான்சிஸ் ஹென்றி பெற்றுக்கொண்டார். நூலை ஜாக்சன் அறிமுகம் செய்தார். செல்வன் செலானியோ வாழ்த்து கவிதை படித்தார். காதல் கனிரசமே! நூலை ஆசிரியர் ஆசிரியை சினெட்ரா பூங்குழலி வெளியிட, ஆசிரியர் யூஜின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். நூலை அலெக்ஸ் அறிமுகம் செய்து பேசினார்.

வெனான்சியுஸ் ரொட்ரிக்ஸ் எழுதிய ஆப்பக்கடை ஆயா என்ற சிறுகதைத் தொகுப்பை அருள்பணியாளர் சா.தே. செல்வராஜ் வெளியிட, குரூஸ் பர்னாந்தீஸ் நற்பணி மன்றத் தலைவர் ஹெர்மென் கில்டு பெற்றுக்கொண்டார். ஆசிரியர் ஜோஅண்டனி நூலை அறிமுகம் செய்து பேசினார். கவிஞர் கமல லியோனாவின் பூவோடு சேர்வதெல்லாம்கவிதைத் தொகுப்பை கலாபன் வாஸ் வெளியிட, பிரின்ஸ் கர்டோசா பெற்றுக்கொண்டார். நூலை கரிசல் பாலாஅறிமுகம் செய்து பேசினார். ஏர்போர்ட்ஸ் அசோசியேஷன் தூத்துக்குடி அமைப்பின் சார்பில் மாணிக்கம்கலாபன் வாஸை வாழ்த்திப் பேசினார். 

நிகழ்வில் மாமன்ற முன்னாள் உறுப்பினர்கள் மனோஜ் குமார், எட்வின் பாண்டியன், ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.  கோரமண்டல் ரொமால்டு, இந்திய மீனவர் சங்க ராஜீ பரதர், அருள்தாஸ், நூலகர் இசக்கி, சசிகுமார், ஆசிரியர்கள் அந்தோணி பிச்சை, சாக்ரோ, உள்ளிட்டோரும், நூற்றுக்கு மேற்பட்டோரும் கலந்துகொண்டனர். முன்னதாக ஆசிரியர் அமிர்தராஜ் இறைவணக்கம் பாடினார். நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்க செயலர் ஆழி புத்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். விழா நாயகன் கலாபன் வாஸ் நன்றியுடன் ஏற்புரையை நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கான ஏற்பட்டைச் செய்து எழுத்தாளர் நெய்தல் யூ. அண்டோ நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory