» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆசிரியர்கள் மீது தாக்குதல்: குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சம் - எஸ்பியிடம் பெற்றோர் மனு!

வியாழன் 23, மார்ச் 2023 12:24:46 PM (IST)

பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர்களை தாக்கியவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக  கீழநம்பிடரம் கிராம ஊர் பொது மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிதத்னர். பின்னர் அவர்கள் கூறுகையில், "எட்டையாபுரம் அருகே கீழநம்பிபுரத்தில் உள்ள இந்து துவக்கப் பள்ளியில் சுமார் 21 பிள்ளைகள் படித்து வருகிறார்கள். 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

கடந்த 21ம் தேதி பாடம் நடந்து கொண்டிருந்தபோது, எங்களது ஊரைச் சார்ந்த முனியசாமி, மாரிச்செல்வி, சிவலிங்கம், செல்வி ஆகிய 4பேர்களும் அத்துமீறி பள்ளிக்குள் உள்ளே நுழைந்து அங்கு பணிபுரியும் தலைமை ஆசிரியை குருவம்மாள் மற்றும் இடைநிலை ஆசிரியர்  பாரத் ஆகியோரை  ஓட ஓட விரட்டி அடித்து, கெட்ட வார்த்தைகளால் திட்டி அவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டிச் சென்றுள்ளனர். 

இது சம்பந்தமாக எட்டையாபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்த பிறகு குற்றவாளிகள் 4 பேரையும் கைது செய்த காவல் துறையினர் இறுதியில் 3 பேரை மட்டும் ரிமாண்ட் செய்தனர். இந்த பிரச்சனைக்கு மூலக் காரணமான மாரிச்செல்வி என்பவரை முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளும்படி காவல் நிலையத்தில் இருந்து அனுப்பி விட்டனர். மேற்கண்ட குற்றவாளிகளால் பள்ளியில் பணிபுரிகின்ற ஆசிரிய பெருமக்களுக்கும், அங்கு படிக்கின்ற எங்களது குழந்தைகளுக்கும் பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை உள்ளது. 

மேலும், முனியசாமி என்பவர் மீது பல வழக்குகள் உள்ளது. இப்படிப்பட்ட நுபர் பள்ளிக் கூடத்திற்குள் கூலிப் படைகளை அனுப்பி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளது. இதனால் எங்களது பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்ப அச்சமாக உள்ளது. ஆகையால் மேற்கண்ட குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் ஆசிரிய பெருமக்களுக்கும், குழந்தைகக்கும் பாதுகாப்பு கிடைக்கும். அதுவரை எங்களது குழந்தைகளை பள்ளிக்கூடம் செல்ல அனுமதிக்க இயலாத நிலை உள்ளது" என தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து

ATHINARAYANAN RMar 24, 2023 - 01:19:03 PM | Posted IP 162.1*****

Who is maiselvi.Does she have any political background? Why was set free?

விடுங்கMar 23, 2023 - 02:38:26 PM | Posted IP 162.1*****

புள்ளை மேல உள்ள பாசம்..

G. அலெக்ஸ் பென்சிகர் அட்வகேட்Mar 23, 2023 - 02:30:05 PM | Posted IP 162.1*****

உருப்படியான செயல்பாடு. கீழநம்பிபுரம் மக்களுக்கு என் வாழ்த்துக்கள். இப்படி எல்லா கிராம மக்களும் செயல்படவேண்டும். ஒழுக்கம் கெட்டுபோன இளைஞர் சமுதாயத்தை மறுபடியும் ஒழுக்கமாக வாழ வழி செய்ய வேண்டியது பொதுமக்கள் எல்லோருடைய கடமையாகும்.

G. அலெக்ஸ் பென்சிகர் அட்வகேட்Mar 23, 2023 - 02:30:04 PM | Posted IP 162.1*****

உருப்படியான செயல்பாடு. கீழநம்பிபுரம் மக்களுக்கு என் வாழ்த்துக்கள். இப்படி எல்லா கிராம மக்களும் செயல்படவேண்டும். ஒழுக்கம் கெட்டுபோன இளைஞர் சமுதாயத்தை மறுபடியும் ஒழுக்கமாக வாழ வழி செய்ய வேண்டியது பொதுமக்கள் எல்லோருடைய கடமையாகும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory