» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
புதன் 22, மார்ச் 2023 10:36:28 AM (IST)
ஏரல் அருகே கணவருடன் பைக்கில் சென்றபோது பெண்ணிடம் 2 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், முக்காணி மேல தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி பாக்கியலட்சுமி (44). நேற்று மதியம் கணவன், மனைவி இருவரும் முக்காணியில் இருந்து ஏரலுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். உமரிகாடு மெயின் ரோட்டில் செல்லும்போது பின்னால் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் திடீரென பாக்கியலட்சுமி கழுத்தில் கிடந்த 2 பவுன் தாலி செயினை பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து பாக்கியலட்சுமி அளித்த புகாரின் பேரில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமீதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி பாலாஜி சரவணன் பங்கேற்பு!!
புதன் 31, மே 2023 4:07:25 PM (IST)

தூத்துக்குடியில் கலைஞரின் நூற்றாண்டு விழா : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!
புதன் 31, மே 2023 3:36:55 PM (IST)

தூத்துக்குடி பேருந்து பணிமனைக்கு கலைஞர் பெயர் : மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
புதன் 31, மே 2023 3:18:28 PM (IST)

மேலூர் ரயில் நிலையம் அருகில் புதியசாலை : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
புதன் 31, மே 2023 2:43:46 PM (IST)

மது கடைகளை மூடக் கோரி உடுக்கை அடித்து தமிழ் மாநில காங்கிரஸ் நூதன போராட்டம்!
புதன் 31, மே 2023 12:52:14 PM (IST)

மனைவியை கத்தியால் குத்திய கணவர் : மது குடிக்க பணம் தர மறுத்ததால் வெறிச்செயல்!
புதன் 31, மே 2023 12:28:31 PM (IST)
