» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வெயிலின் தாக்கத்தால் பெண் பரிதாப சாவு
ஞாயிறு 19, மார்ச் 2023 12:28:55 PM (IST)
விளாத்திகுளம் அருகே வெயிலின் தாக்கத்தால் மிளகாய் பழம் பறிக்கச் சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ஏ.சொக்கலிங்கபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த போத்திராஜ் என்பவரது மனைவி மங்களஈஸ்வரி (35). இவர்களுக்கு பவித்ரா(3) என்ற மகள் உள்ளார். மங்களஈஸ்வரி விளாத்திகுளம் அடுத்துள்ள ராமச்சந்திரபுரம் கிராமத்தில் விவசாய கூலி வேலைக்கு மிளகாய் பழம் பறிப்பதற்காக சென்றுள்ளார்.
மதியம் 2 மணி அளவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தனக்கு தலை சுற்றுவதாக கூறிவிட்டு அருகே உள்ள மரத்தின் அடியில் ஓய்வெடுப்பதற்காக சென்று அமர்ந்துள்ளார். ஆனால் அந்த இடத்திலேயே மங்கள ஈஸ்வரி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதிகபடியான வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்த மங்கலஈஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வழக்கு பதிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் டிரைவரை தாக்கி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
புதன் 22, மார்ச் 2023 3:01:56 PM (IST)

மாப்பிள்ளையூரணியில் கிராம சபை கூட்டம்
புதன் 22, மார்ச் 2023 2:52:51 PM (IST)

தூத்துக்குடி பெண்ணை திருமணம் செய்து மோசடி : கல்யாண மன்னன் கைது!
புதன் 22, மார்ச் 2023 12:34:40 PM (IST)

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து
புதன் 22, மார்ச் 2023 12:27:58 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்கள் ஏலம்: மார்ச் 29ம் தேதி நடக்கிறது - எஸ்பி தகவல்!!
புதன் 22, மார்ச் 2023 11:04:48 AM (IST)

கோவிலில் பூட்டை உடைத்து 2 பவுன் நகை திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை!!
புதன் 22, மார்ச் 2023 11:00:01 AM (IST)
