» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் மார்ச் 1 முதல் மூடல் : தெற்கு ரயில்வே தகவல்!
திங்கள் 27, பிப்ரவரி 2023 4:20:27 PM (IST)

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் வருகிற மார்ச் 1ம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி - மதுரை இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி தூத்துக்குடியில் 1வது கேட், 2வது கேட், புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தூத்துக்குடி முதல் மீளவிட்டான் வரை இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருவதால் வருகிற 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை மேலூர் ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்படும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மேலூரில் ரயில்கள் நின்று செல்லாது. அதேபோன்று தூத்துக்குடி 2-ம் கேட்டும் மூடப்படுவதால் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பாக புதிய பஸ் நிலையத்துக்கு எதிரே இடம் மாறுகிறது. அங்கு ரயில் நிலையத்துக்கான கட்டுமான பணிகளும் நடந்து வருகின்றன. இந்த ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்போது, வெளியூர் பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி எளிதில் பஸ்சை பிடித்து ஊருக்கு செல்ல வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பெண்ணை திருமணம் செய்து மோசடி : கல்யாண மன்னன் கைது!
புதன் 22, மார்ச் 2023 12:34:40 PM (IST)

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து
புதன் 22, மார்ச் 2023 12:27:58 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்கள் ஏலம்: மார்ச் 29ம் தேதி நடக்கிறது - எஸ்பி தகவல்!!
புதன் 22, மார்ச் 2023 11:04:48 AM (IST)

கோவிலில் பூட்டை உடைத்து 2 பவுன் நகை திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை!!
புதன் 22, மார்ச் 2023 11:00:01 AM (IST)

தூத்துக்குடியில் பள்ளி மாணவி உட்பட 2பேர் மாயம்!
புதன் 22, மார்ச் 2023 10:50:02 AM (IST)

இடைநின்ற மாணவியை மீண்டும் பள்ளியில் சேர்த்த காவல்துறையினருக்கு பாராட்டு!
புதன் 22, மார்ச் 2023 10:40:42 AM (IST)

தூத்துக்குடிFeb 27, 2023 - 07:55:39 PM | Posted IP 162.1*****