» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் : எஸ்பி எச்சரிக்கை!
ஞாயிறு 26, பிப்ரவரி 2023 1:04:58 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் வாகனப் பந்தயங்களில் ஈடுபடுவது, அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களைப் பொருத்துவது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும் என எஸ்பி பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டப்படி, மோட்டார் வாகனங்களில் சாலைகளில் பந்தயங்களில் ஈடுபட்டால் (Racing) முதல் முறை மீறுபவர்களுக்கு ரூபாய் 5000/- அபராதமும், இரண்டாவது முறை மீறுபவர்களுக்கு ரூபாய் 10,000/- அபராதமும்,
இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களைப் பொருத்தி அதிக ஒலி எழுப்பிச் செல்பவர்கள் (Alteration of Loud silencers) மற்றும் வாகனங்களில் ஹேண்டில்பார் போன்றவற்றை மாற்றி (Retrofitting of motor vehicle parts) வாகனங்களை பயன்படுத்துவர்களுக்கு ரூபாய் 5,000/- அபராதமும்,
செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் (Use of handheld communication devices while driving) முதல் முறை ரூபாய் 1,000/- அபராதமும், இரண்டாவது முறை ரூபாய் 10,000/- அபராதமும்,
மதுபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு (Drunk and Driving) ரூபாய் 10,000/- அபராதமும்,
காப்பீடு இல்லாமல் வாகனங்கள் ஓட்டினால் (without insurance) முதல் முறை ரூபாய் 2,000/-மும், இரண்டாவது முறை ரூபாய் 4,000/- அபராதமும்,
இருசக்கர வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட 2 நபர்களுக்கு மேல் பயணம் செய்தால் (Triples) ரூபாய் 1,000/- அபராதமும்,
இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் ஓட்டினாலும் (without helmet), நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினாலும் (without seat belt) ரூபாய் 1,000/- அபராதமும்,
பதிவு செய்யப்படாத வாகனங்களை பயன்படுத்தினால் (Without registration) முதல் முறை ரூபாய் 2,500/-ம் இரண்டாவது முறை பயன்படுத்தினால் ரூபாய் 5,000/-அபராதமும்,
அபாயகரமாகவும், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் (Driving dangerously - Rash and Negligent Driving ) வாகனம் ஓட்டினால் முதல் முறை ரூபாய் 1,000/-மும், இரண்டாவது முறை ரூபாய் 10,000/- அபராதமும்,
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் (without driving license) வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூபாய் 5,000/- அபராதமும் விதிக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மக்களின் ஒருவன்Feb 26, 2023 - 05:24:49 PM | Posted IP 162.1*****
1) வெயில் காலத்தில் அதிக நேரம் ஹெல்மெட் அணிந்தால் ஹெல்மெட் குள்ளே வியர்க்கும் தலைவலி வரும், மன உளைச்சல் ஏற்படும் 2) குற்றவாளி ஹெல்மெட் அணிந்தால் முகத்தை அடையாளம் காண முடியாது, 3) NH4 HIGHWAY சாலையில் செல்பவர்கள் மட்டும் ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும், ஊருக்குள்ளே ஹெல்மெட் அணியாதவர்களை குற்றவாளி மாதிரி பார்ப்பது தவறு..4) எல்லா சாலைகளில் இரு பக்கமும் மண் தேங்கி இருந்தால் இருசக்கர வாகனஓட்டிகளுக்கு ஆபத்து வழுக்கி விழ வாய்ப்புள்ளது அதை மாநகராட்சியை முறையிட்டு அப்புறப்படுத்த வேண்டும் . நான் சொல்வதெல்லாம் உண்மையே. என்னத்த சொல்ல? ஹெல்மெட் தவிர மற்றவைகளை நடவடிக்கை எடுக்கலாமே.
KumarFeb 26, 2023 - 04:35:50 PM | Posted IP 162.1*****
இதை நடைமுறை படுத்தவேண்டும்
MAKKALFeb 26, 2023 - 02:58:32 PM | Posted IP 162.1*****
VERY GOOD DECISION
NameFeb 26, 2023 - 01:50:10 PM | Posted IP 162.1*****
Lawyer murder panavangala pidichacha ?
மேலும் தொடரும் செய்திகள்

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!
புதன் 27, செப்டம்பர் 2023 12:49:18 PM (IST)

சாலையில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை பவளப்பாம்பு: வனத்துறையிடம் ஒப்படைப்பு!
புதன் 27, செப்டம்பர் 2023 12:03:10 PM (IST)

திருச்செந்தூரில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு: போராட்டம் நடத்த ஊர் மக்கள் முடிவு
புதன் 27, செப்டம்பர் 2023 11:16:00 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மீது கார் மோதல்: வாலிபர் பலி!
புதன் 27, செப்டம்பர் 2023 10:54:11 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை : கோட்டாட்சியர் விசாரணை!
புதன் 27, செப்டம்பர் 2023 10:47:50 AM (IST)

பைக் விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலி!
புதன் 27, செப்டம்பர் 2023 10:40:33 AM (IST)

P.S. RajFeb 26, 2023 - 09:43:26 PM | Posted IP 162.1*****