» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேருந்துகள் செல்ல இடையூறாக உள்ள பள்ளி சுற்று சுவரினை அகற்ற வேண்டும்: ஆணையர் வேண்டுகோள்

புதன் 8, பிப்ரவரி 2023 5:46:00 PM (IST)

திருச்செந்தூரில் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வெளிவரும் பாதையில் அமைந்துள்ள பள்ளியின் சுற்று சுவரினை அகற்ற வேண்டும் என நகராட்சி ஆணையாளர் வேலவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

திருச்செந்தூர் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் அருள்மிகு செந்தில் ஆண்டவர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பேருந்து நிலைய வளாகத்தில் இருந்து பேருந்து திரும்புவதற்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி பள்ளி வளாகத்தில் உள்ள சுற்று சுவரை அகற்றி தருமாறு நகராட்சி ஆணையர் வேலவன் பள்ளி தலைமை ஆசிரியருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது "சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் அவர்களால் திருச்செந்தூர் நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையத்தினை 02.01.2023 அன்று ஆய்வு செய்யப்பட்டது. மேற்படி ஆய்வின்போது பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளிவரும் பாதையானது மிகவும் குறுகளாக இருப்பதினை பார்வையிட்டு, பேருந்துகள் எளிதாக வெளியில் வருவதற்கு ஏதுவாக அருகில் உள்ள அருள்மிகு செந்திலாண்டவர் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான சுற்றுச் சுவரினை அகற்றி மாற்று இடத்தில் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் அதற்கான செலவினத்தை நகராட்சியிலிருந்து மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டது. 

ஆதலால் மேற்கண்டவாறு நகராட்சி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வெளிவரும் பாதையினை அகலப்படுத்திட ஏதுவாக பள்ளியின் சுற்றுச் சுவரினை மாற்று இடத்தில் அமைத்திடும் பணியினை மேற்கொள்ள உரிய நடவக்கை எடுத்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory