» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் புதிய சிமெண்ட் சாலை பணிகள்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
புதன் 8, பிப்ரவரி 2023 12:37:39 PM (IST)

தூத்துக்குடியில் கருத்த பாலம் முதல் வட பத்திரகாளியம்மன் கோவில் வரை நடைபெற்று வரும் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி கருத்த பாலம் முதல் வட பத்திரகாளியம்மன் கோவில் வரை நடைபெற்று வரும் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளையும் மற்றும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சவேரியானா மைதானம் பின்புறம் உள்ள வடிகாலானது தூர்ந்து போய் பல ஆண்டுகளாக வடிகாலின் வழியாக நீர் செல்வதற்கு மணல் திட்டுகளும் அமலைச் செடிகளும் தடையாக இருந்தது.தற்போது அங்கே நடைபெற்று வரும் புதிய வடிகால் பணிகளை மேயர் ஆய்வு செய்தார்.
இதேபோல மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால், குடிநீர் குழாய் பணிகள் மற்றும் பணிகள் நிறைவடைந்த பண்டு கரை சாலையினை பார்வையிட்டார். அங்கு போக்குவரத்திற்கு இடையூராக உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க உத்தரவிட்டார். மேலும் அந்த சாலையில் தேவையான இடங்களில் அகலப்படுத்தவும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். ஆய்வின்போது மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர், மாநகர கவுன்சிலர்கள், நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள். உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிராம சபைக் கூட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் - ஆட்சியர் உறுதி!!
புதன் 22, மார்ச் 2023 3:09:51 PM (IST)

தூத்துக்குடியில் டிரைவரை தாக்கி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
புதன் 22, மார்ச் 2023 3:01:56 PM (IST)

மாப்பிள்ளையூரணியில் கிராம சபை கூட்டம்
புதன் 22, மார்ச் 2023 2:52:51 PM (IST)

தூத்துக்குடி பெண்ணை திருமணம் செய்து மோசடி : கல்யாண மன்னன் கைது!
புதன் 22, மார்ச் 2023 12:34:40 PM (IST)

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து
புதன் 22, மார்ச் 2023 12:27:58 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்கள் ஏலம்: மார்ச் 29ம் தேதி நடக்கிறது - எஸ்பி தகவல்!!
புதன் 22, மார்ச் 2023 11:04:48 AM (IST)

MauroofFeb 9, 2023 - 07:22:48 PM | Posted IP 162.1*****