» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் கடையடைப்பு போராட்டம்!
புதன் 8, பிப்ரவரி 2023 10:39:49 AM (IST)

கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தினசரி மார்க்கெட்டை கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 6.84 கோடி மதிப்பில் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மார்க்கெட்டை கூடுதல் பஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சில வியாபாரிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இடமாற்றம் செய்வதற்கு தடையாணை பெற்றனர்.
இதையடுத்து, கூடுதல் பஸ் நிலையத்தில் மார்க்கெட் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யும் வகையில், கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில், மார்க்கெட் குத்தகைதாரர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நகராட்சி சேர்மன் கருணாநிதி தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசுகையில், கூடுதல் பஸ் நிலையத்தில் அமைக்கப்படவுள்ள தற்காலிக மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.
கூட்டத்தில், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பார்த்தசாரதி, தாசில்தார் சுசிலா, டி.எஸ்.பி. வெங்கடேஷ், நகராட்சி பொறியாளர் ரமேஷ், நகரமைப்பு அலுவலர் ரமேஷ்குமார், உதவி பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் நாராயணன் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன், மார்க்கெட் சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத்தினர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
நகராட்சி தினசரி மார்க்கெட்டில் தற்போது கடைகள் நடத்தி வரும் அனைத்து கடைக்காரர்களுக்கும் அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய மாற்று இடத்தை ஏற்பாடு செய்துதர வேண்டும். தினசரி மார்க்கெட் புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்ட பின், ஏற்கெனவே மார்க்கெட்டில் கடைகள் நடத்தி வருபவர்களுக்கு உரிய முறையில் முன்னுரிமை அடிப்படையில் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் லாரி செட் உரிமையாளர் அடித்துக்கொலை- போலீசார் விசாரணை
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 12:28:08 PM (IST)

மூத்த எழுத்தாளர் கலாபன் வாஸ் நூல் வெளியீட்டு விழா
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 11:50:58 AM (IST)

தூத்துக்குடியில் பில்டிங் காண்ட்ராக்டர் கார் திருட்டு: வாலிபர் கைது
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 11:42:03 AM (IST)

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 11:24:00 AM (IST)

தூத்துக்குடியில் குருத்தோலை ஞாயிறு பவனி : திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 7:54:15 AM (IST)

மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 7:39:50 AM (IST)

Karthikeyan SFeb 9, 2023 - 06:29:02 PM | Posted IP 162.1*****