» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா

புதன் 8, பிப்ரவரி 2023 7:46:01 AM (IST)ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றது.

நவதிருப்பதி பெருமாள் கோவில்களில் முதல் கோவிலான கள்ளபிரான் பெருமாள் கோவிலில் தை தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 7மணி அளவில் கள்ளபிரான் சுவாமி, நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் ஆகிய உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர். சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து தெப்பத்தில் சுவாமிகள் 5 முறை வலம் வந்தனர். அப்போது தெப்பத்தை சுற்றிலும் குவிந்திருந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நேற்று இரவு 7மணிக்கு கள்ளபிரான் சுவாமி மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory