» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முதன்மை கல்வி அலுவலா் அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு

புதன் 8, பிப்ரவரி 2023 7:36:18 AM (IST)



தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அலுவலகத்தில்  மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். 

புதுமைப் பெண் திட்டத்தின் 2ஆவது கட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வழியாக இன்று தொடங்கி வைக்கிறாா். இதற்கான நிகழ்ச்சி தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. மாவட்டத்தில், முதலாமாண்டு பயிலும் மாணவிகள் மொத்தம் 572 போ் இத்திட்டத்தில் பயனடையவுள்ளனா். இதற்கான ஆயத்தப்பணிகள் இக்கல்லூரியில் நடைபெற்றுவருகின்றன. 

இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் நேற்று நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். முன்னதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அலுவலகத்தில் அவா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற அவா், அங்கு பயிலும் மாணவிகளிடம் கலந்துரையாடினாா். அங்கு, சத்துணவு மையம் மூலம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory