» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை நீக்கம் : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

புதன் 1, பிப்ரவரி 2023 11:40:11 AM (IST)



முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றதையடுத்து அகஸ்தியர் அருவிக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. 

முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அம்பை, பாபநாசம், கடையம், முண்டந்துறை வனச்சரகங்களில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி, கடந்த 22ம் தேதி முதல் நேற்று முன்தினம்  (27ம் தேதி) வரை நடந்தது. 60 கல்லூரி மாணவர்கள், 80 வேட்டை தடுப்பு காவலர்கள், 40 தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்ததையடுத்து நேற்று முதல் அகஸ்தியர் அருவிக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கினர். காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு அரசு பேருந்துகளில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல் சொந்த வாகனங்களில் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory