» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் கலைப்போட்டிகள்

புதன் 1, பிப்ரவரி 2023 10:47:40 AM (IST)



தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையான கலைப்போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கிடையே 'Beats on Feets' தலைப்பில் மாணவர்களிடையே திறமையை வெளிக்கொணரும் பொருட்டு இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. தூத்துக்குடி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கான போட்டிகள் நடைபெற்றது.இதில் ஏராளமான பள்ளிகளில் இருந்து மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் ஏஞ்சலின் விஜய நிர்மலா பங்கேற்றார். கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் 8வது முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர் போட்டிகளில் பங்கேற்றனர். நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம், குழு பாடல், ரங்கோலி, ஓவியம் வரைதல், மண்பாண்டத்தில் ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமையை நிரூபித்தனர்.
 
இந்த போட்டிகளில் முதல் பரிசு, ஓவர் ஆல் சாம்பியன் பரிசு கோப்பை பிரிவு ஒன்றில் அரசு மேல்நிலைப்பள்ளி ஆறுமுகநேரியும், பிரிவு இரண்டில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி பள்ளியும் பெற்றுச் சென்றது. புனித மதர் தெரசா பொறியியல் கல்லூரி நடத்திய போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. பின்பு பாராட்டு விழாவிற்கு ஸ்காட் கல்வி குழும இயக்குநர் (மாணவர் சேர்க்கை) ஜான் கென்னடி தலைமை தாங்கி பாராட்டி பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கல்லூரி இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன், முதல்வர் ஜஸ்பர் ஞானச்சந்திரன், நிர்வாக மேலாளர் விக்னேஷ், மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory