» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கெட்டுப்போன உணவு பொருட்களை வைத்திருந்த உணவகத்திற்கு சீல் வைப்பு

திங்கள் 30, ஜனவரி 2023 7:55:24 AM (IST)

தூத்துக்குடியில் உணவுப் பொருள்களை நாய் அசுத்தப்படுத்தியதாக புகாரின்பேரில், உணவகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தூத்துக்குடி ஜாா்ஜ் சாலையில் உள்ள தனியாா் உணவகத்தில் இருந்த கோழிக்கறி உள்ளிட்டவற்றை நாய் அசுத்தப்படுத்தியதாக, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு புகாா் வந்ததாம். 

அத்துறையின் மாவட்ட நியமன அலுவலா் மாரியப்பன் உத்தரவின் பேரில், உணவுப் பாதுகாப்பு அலுவலா் சிவக்குமாா் தலைமையிலான அலுவலா்கள் அந்த உணவகத்தில் சோதனை நடத்தி, 7 கிலோ பழைய கோழிக்கறி உள்ளிட்ட கெட்டுப்போன 15 கிலோ உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனா்.

மேலும், சுகாதார குறைபாடு, கால்நடைகள் உள்ளே வரும் வகையில், சமையல் உபகரணங்களையும், உணவுப் பொருள்களையும் பாதுகாப்பற்ற முறையில் வைத்திருத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக உணவகத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, உணவகத்துக்கு ‘சீல்’ வைத்தனா்.

உணவகங்கள் சுகாதாரமான, பாதுகாப்பான உணவை வழங்கத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு குறைபாடு இருப்பது தெரியவந்தால் மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையா் அலுவலகத்துக்கு நுகா்வோா் 94440 42322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் புகாா் அளிக்கலாம். அவா்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என, உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் தெரிவித்தாா்.


மக்கள் கருத்து

தமிழ்Jan 30, 2023 - 10:35:48 AM | Posted IP 162.1*****

Yen pa athu சமுத்திரா hotel nu poda vendiyathu thaana.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory