» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி மீது பைக் ஏற்றி கொல்ல முயன்ற கணவர் கைது

புதன் 25, ஜனவரி 2023 7:49:06 AM (IST)

நாலாட்டின்புத்தூர் அருகே மனைவி மீது மோட்டார் பைக் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக கணவர் கைது செய்யப்பட்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள விட்டிலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சுப்பாராஜ் மகன் சந்திரமோகன் (39). டிரைவரான இவருக்கு ராதா (35) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சந்திரமோகன் - ராதா தம்பதியினர் தற்போது பிரிந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மகன்கள் இருவரும் தாய் ராதாவுடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று ராதா தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோாது, எதிரே மோட்டார் பைக்கில் வந்த சந்திரமோகன், மனைவி மீதுள்ள கோபத்தில் பைக்கை அவர் மீது ஏற்றியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராதா கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி வழக்குப்பதிவு செய்து சந்திரமோகனை கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

ஆடு திருடிய 3பேர் கைது : ஆட்டோ பறிமுதல்!

புதன் 1, பிப்ரவரி 2023 12:06:28 PM (IST)

Sponsored AdsThoothukudi Business Directory