» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் உழவர் நலத்துறை செயலர் ஆய்வு
செவ்வாய் 24, ஜனவரி 2023 8:19:15 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாரம் சின்னமலைக்குன்று வருவாய் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட தரிசு நிலத் தொகுப்பு மேம்பாட்டு பணிகளை வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலர் சமயமூர்த்தி ஆய்வு செய்தார்.
இத்திட்டத்தின்கீழ் சின்னமலைக்குன்று கிராமத்தில் 10-15 ஏக்கர் கொண்ட தரிசு நிலத் தொகுப்புகள் நான்கு எண்ணங்கள் உருவாக்கப்பட்டு தற்சமயம் இரண்டு எண்ணங்கள் அரசு நிதி உதவியுடன் முற்புதர்கள் அகற்றப்பட்டு பயிர் சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சின்னமலைக்குன்று கிராமத்தில் தமிழக அரசின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் மூலம் தரிசாகப யன்படுத்தப்படாமல் இருந்த 61 ஏக்கர் நிலத்தில் தற்போது விவசாயிகளால் உளுந்து, மக்காச்சோளம் மற்றும் கம்பு பயிர்கள் 13 ஏக்கரில் பயிரிடப்பட்டு அவர்களது வருவாய்க்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இத்தரிசுநிலத் தொகுப்புகளில் திறந்த வெளிக் கிணறுகள் மற்றும் பண்ணைக் குட்டைகள் அரசு நிதி உதவி யுடன் அமைத்தும் நீர் ஆதாரங்களை பெருக்கி தரிசு நிலங்களை தொடர் சாகுபடிக்கு கொண்டு வரவும் இலாபம் தரும் பழமரக்கன்றுகளான கொய்யா, நெல்லி, எலுமிச்சை போன்றவற்றை நடவு செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளமரியாதை;குரிய வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலர் விவசாயிகளை கேட்டுக் கொண்டார்கள்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக இலவசமாக தென்னங்கன்றுகள், மானிய விலையில் விசைத் தெளிப்பான்கள் ஆகியவற்றையும் தோட்டக்கலைத்துறை சார்பாக பழமரக ;கன்றுகள் மற்றும் காய்கறி விதைகள் ஆகியவற்றையும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அரசு செயலர் மற்றும் தூத்துக்கு டிமாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு வழங்கினார்கள். ஆய்வின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ் உடனிருந்தார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சொ.பழனிவேலாயுதம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியாரம்மாள், வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) பாலசுப்பிரமணியன், வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) சாந்திராணி, வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) மனோரஞ்சிதம், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் கிலாட்வின் இஸ்ரேல், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) முருகப்பன் மற்றும் தோட்டக்கலை துணை இயக்குநர் (பொ) சுந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் நாகராஜன் செய்தார். வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத் துறை களப்பணியாளர்களால் நிகழ்ச்சிக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை
வியாழன் 30, நவம்பர் 2023 11:53:05 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகர் பயிற்சி கூடாது : உயர் நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 30, நவம்பர் 2023 11:49:47 AM (IST)

தூத்துக்குடியில் பள்ளி ஆண்டு விழா: மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
வியாழன் 30, நவம்பர் 2023 11:29:34 AM (IST)

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து வாலிபர் பலி
வியாழன் 30, நவம்பர் 2023 10:56:10 AM (IST)

வேளாண் திட்டத்திற்கு ரூ.34 கோடி கடன் வழங்க இலக்கு : ஆட்சியர் லட்சுமிபதி தகவல்!
வியாழன் 30, நவம்பர் 2023 10:38:42 AM (IST)

தூத்துக்குடியில் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது!
வியாழன் 30, நவம்பர் 2023 10:22:17 AM (IST)
