» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ராணுவ வீரரின் திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலி : தக்கலை அருகே பரபரப்பு

செவ்வாய் 24, ஜனவரி 2023 5:24:55 PM (IST)

தக்கலை அருகே வேறு பெண்ணுடன் நடைபெற இருந்த ராணுவ வீரரின் திருமணத்தை காதலி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குமரி மாவட்டம்,  தக்கலை அருகே உள்ள சாரோடு பகுதியை சேர்ந்தவர் சுபின் (27). சென்னையில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் 24 வயதுடைய எம்.சி.ஏ. பட்டதாரியான இளம்பெண்ணுக்கும் கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மலர்ந்தது. இருவரும் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர்.

சுபின் சொந்த ஊருக்கு வரும்போதெல்லாம் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக சுபின் காதலியுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இளம்பெண் போன் செய்தாலும் எடுக்காமல் துண்டித்துள்ளார். இதையடுத்து சுபின் குறித்து விசாரித்த போது அவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது தெரிய வந்தது. இவர்களது திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சுபினை தொடர்பு கொண்டபோது, அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் செய்வதறியாது தவித்த இளம்பெண், சுபினை திருமணம் செய்ய இருந்த பெண் வீட்டிற்கு சென்று மணப்பெண்ணிடம் சுபின் தன்னை காதலித்து ஏமாற்றியதாக கூறினார். இதைகேட்டு மணப்பெண்ணும், அவரது உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் மணப்பெண் சுபினை திருமணம் செய்ய மறுத்தார். இதனால் நேற்று நடைபெற இருந்த திருமணம் தடைபட்டது.

இந்த சம்பவம் குறித்து இளம்பெண் தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், ''சுபினும் நானும் கடந்த 3½ ஆண்டுகளாக காதலித்து வந்தோம். சில மாதங்களுக்கு முன்பு அவர் உல்லாசமாக இருக்க விரும்பினார். ஆனால் அதற்கு நான் உடன்படவில்லை. அதன்பிறகு சுபின் என்னை தவிர்த்து வந்தார். தற்போது அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பது தெரியவந்தது. என்னை ஏமாற்றிய சுபின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் சுபின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

ஆடு திருடிய 3பேர் கைது : ஆட்டோ பறிமுதல்!

புதன் 1, பிப்ரவரி 2023 12:06:28 PM (IST)

Sponsored AdsThoothukudi Business Directory