» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகள் காதலனுடன் சென்றதால் தம்பதியர் தற்கொலை : தூத்துக்குடி அருகே சோகம்

செவ்வாய் 24, ஜனவரி 2023 11:41:50 AM (IST)

தூத்துக்குடி அருகே மகள் காதலனுடன் சென்றதால் தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகேயுள்ள கீழ வல்லநாடு, கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை (45), இவரது மனைவி சங்கரம்மாள் (40). இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் பிகாம் முடித்துள்ளார். 

இந்நிலையில், நேற்று அவரது மகள், தான் காதலித்து வந்த  ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் சென்றுவிட்டாராம். இதில் மனவேதனையடைந்த சங்கரம்மாள் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலையில் மனைவி தூக்கில் தாெங்கியதை பார்த்த கணவர் அதிர்ச்சியில் விஷம் குடித்துள்ளார். 

உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன், ரூரல் டிஎஸ்பி (பொ) சத்யராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 


மக்கள் கருத்து

TN69Jan 25, 2023 - 11:18:36 PM | Posted IP 162.1*****

காதல் பலி வாங்கிவிட்டது

அவளுக்குJan 25, 2023 - 02:56:36 PM | Posted IP 162.1*****

காம வெறி... அவ்ளோதான்... நீங்க ஏன் அதுக்கு சாகனும்... முன்னமே இதை எல்லாம் சொல்லி வளக்கணும்... இல்லைனா இப்படிதான் நடக்கும்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஆடு திருடிய 3பேர் கைது : ஆட்டோ பறிமுதல்!

புதன் 1, பிப்ரவரி 2023 12:06:28 PM (IST)

Sponsored Ads











Thoothukudi Business Directory