» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சலவை தொழிலாளர்களுக்கு அநீதி ஏற்பட்டால் அதிமுக வேடிக்கை பார்க்காது - எஸ்.பி. சண்முகநாதன் பேச்சு
திங்கள் 23, ஜனவரி 2023 11:06:57 AM (IST)

தூத்துக்குடியில் சலவை தொழிலாளர்களுக்கு அநீதி ஏற்பட்டால் அதிமுக வேடிக்கை பார்க்காது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கூறினார்.
தூத்துக்குடி எம்ஜிஆர் பூங்கா எதிரே அமைந்துள்ள எம்ஜிஆர் திடலில் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பேசியதாவது: தூத்துக்குடியில் சலவை தொழிலாளர்களுக்கு கனிமொழி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் ஆகியோரால் அநீதி இழைக்கப்பட்டால் அதிமுக வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது அதை தகர்த்து தெறிவோம்
தூத்துக்குடியில் சலவைதொழிலாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் இது ஆகவே உரிய முறையில் செயல்படுத்த வேண்டும் கமிஷன் பணத்தை பெற்றுக்கொண்டு சலவை தொழிலாளர்களுக்கு கிடைக்காமல் செய்ய கூடாது. தூத்துக்குடியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி மற்றும் எல்லா திட்டமும் அதிமுக ஆட்சியில் கொண்டு வர பட்டதே அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி கொண்டு இருக்கிறீர்கள் இந்த ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டும் வேலைதான் நடக்கிறது.
அதிமுக ஆதரவு தெரிவித்து விட்டார்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் விரைவில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற போகிறது ஸ்டாலின் ஆட்சி கலைகிறது 2024 ல் அதிமுகவை தான் மக்கள் வெற்றி அடைய செய்வார்கள் தலைவர் எடப்பாடியார் முதல்வர் ஆக வருவார் இந்த விடியலுக்கு ஒரு முடிவு கட்ட தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள். ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக உறுதியாக வெற்றி பெறும் என்றார். பின்பு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இன்று நடைபெற்ற பொதுகூட்டத்தில் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
மக்கள் கருத்து
ராமநாதபூபதிJan 23, 2023 - 11:29:09 AM | Posted IP 162.1*****
அதிமுக ஆதரவு தெரிவித்து விட்டார்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் விரைவில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற போகிறது. அடேங்கப்பா உங்க கட்சிக்கு நாடாளுமன்றத்தில் எத்தனை எம் பி இருக்காங்க வைத்தியரே. இது கனவிலும் நடக்காத திட்டம்
மேலும் தொடரும் செய்திகள்

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!
புதன் 27, செப்டம்பர் 2023 12:49:18 PM (IST)

சாலையில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை பவளப்பாம்பு: வனத்துறையிடம் ஒப்படைப்பு!
புதன் 27, செப்டம்பர் 2023 12:03:10 PM (IST)

திருச்செந்தூரில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு: போராட்டம் நடத்த ஊர் மக்கள் முடிவு
புதன் 27, செப்டம்பர் 2023 11:16:00 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மீது கார் மோதல்: வாலிபர் பலி!
புதன் 27, செப்டம்பர் 2023 10:54:11 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை : கோட்டாட்சியர் விசாரணை!
புதன் 27, செப்டம்பர் 2023 10:47:50 AM (IST)

பைக் விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலி!
புதன் 27, செப்டம்பர் 2023 10:40:33 AM (IST)

OOPSJan 23, 2023 - 12:06:25 PM | Posted IP 162.1*****