» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் திருநங்கைகள் சாலை மறியல்: ஆட்சியர் அலுவலகம் அருகே பரபரப்பு!
திங்கள் 9, ஜனவரி 2023 12:30:47 PM (IST)

தூத்துக்குடியில் காவல்துறையினரைக் கண்டித்து திருநங்கைகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாளை., ரோட்டில் சுமார் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். பின்னர் திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17.11.2022 அன்று பாளை மெயின் ரோடு பகுதியில் சில திருநங்கைகள் செய்த தவறுகளால் 4 திருநங்கைகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். இதே சம்பவத்தை கருத்தில் கொண்டு மேலும் திருநங்கைகளை கைது செய்யும் நிலை தொடரப்படுகிறது. சம்பவம் வரை திருநங்கைகள் தெருவில் நடந்து செல்வது கூட பெரும் பிரச்சனையாக நடைபெற்ற நாள் முதல் இன்று உள்ளது. திருநங்கைகள் வெளியே நடமாடினால் கூட கைது செய்யப்படும் எனக் கூறி காவல்துறையின் அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம்.
மேலும் வாடகை வீட்டில் வசித்து வரும் திருநங்கைகளை அவ்வீட்டின் உரிமையாளர்கள் வீட்டை காலி செய்யும்படியும் அழுத்தம் கொடுக்கிறார்கள். தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வதென்று அறியாமல் திருநங்கைகள் மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். மேலும் தூத்துக்குடி மாவட்ட அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என அனைவரையும் நேரில் சந்தித்து பேசியும் எந்த பயனும் இல்லை. எந்த பதிலும் இல்லை.
ஒரு மாத காலமாக சாப்பாட்டுக்கு வழி இல்லாத நிலையில் திருநங்கைகள் வாழ்ந்து கூட வருகிறோம். சமூகத்தில் ஒரு ஆண் தவறு செய்தால் எல்லா ஆண்களும் பாதிக்கப்படுவதில்லை. இதே போல் தான் பெண்களுக்கும் நாஙகள் மட்டும் என்ன பாவம் செய்தோம். ஒரு சில திருநங்கைகள் செய்த தவறினால் மாவட்டத்தின் ஒட்டு மொத்த திருநங்கைகளும் "வாழவா சாவதா" என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எங்களையும் வாழ விடுங்கள். இல்லை வாழ்வதற்கான வழியை விடுங்கள். சமுதாயத்தில் நாங்களும் மனிதர்கள் தான். எங்களை மீண்டும் காட்சிப் பொருளாக மாற்றி விடாதீர்கள்" என தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
கேகேJan 10, 2023 - 05:45:14 AM | Posted IP 162.1*****
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே தினமும் இரவு திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் இரவு குடிபோதையில் வருபவர்கள் மற்றும் தனியாக இவர்களிடம் சிக்குபவர்களிடமிருநீது பணம் செயின் மோதிரம் போன்றவற்றை அடித்து வழிப்பறி செய்வது தொடர்கதையாகி வருகிறது.பாதிக்கப்பட்டவர் பெயர் வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடும் என்பதால் காவல் துறையிடம் புகார் கொடுக்க மாட்டார்கள் இது இவர்களுக்கு ரொம்ப வசதியாகிவிட்டது.போலிஸ் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற நினைப்பில் துணிகரமாக இந்த வழிப்பறி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்
P.S. RajJan 10, 2023 - 12:39:00 AM | Posted IP 162.1*****
பழைய பேருந்து நிலையத்திலிருந்து பள்ளிவாசல் வரை திருநங்கைகள் செய்யும் அட்டகாசங்கள் எல்லைமீறி விட்டன. யாசகம் பெறுகிறோம் என்று சொல்லி 'இளைஞர்களை 'கேரோ' செய்வது... ரோட்டில் வைத்து ஒருவர் தலை முடியை பிடித்தது இழுப்பது.... டவுன் பஸ்சுக்குள் நுழைந்து ஆபாச நடனம் ஆடுவது...' என இவர்கள் செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சமீபத்தில் திருட்டு செயலில் ஈடுபட்ட நான்கு திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர். திருநங்கைகளை நகருக்குள் விடுவது பொதுஅமைதிக்கு களங்கம விளைவிக்கும்.
Vishnupriya tgJan 9, 2023 - 10:38:15 PM | Posted IP 162.1*****
யாரும் அப்படி பேசாதீங்க நாங்களும் உங்களை போல் ஒரு மனிதர்கள் தான் வேலை பார்க்க வேண்டியதானேன்னு கேக்கீங்கல்ல உங்க வீட்டுல வேலைக்கு எங்களை சேர்த்துக்கிறிங்களா சொல்லுங்க உங்க வீட்டுல ஒருத்தங்க திருநங்கையாக பிறந்திருந்தால் நீங்கள் அப்படி பேசுவீங்களா... வன்முறையில் சம்பாதிங்கம்முன்னா அது உங்க தப்பு உங்க வீட்ல ஒருத்தவங்க இப்படி பிறந்திருந்தால் நீங்கள் ஆபாசமாக பார்ப்பீர்க்கலா சொல்லுங்கள் எழும்பில்லாத நாக்கு என்னனாலும் பேசும் அப்படித்தானே.... 😡
தீபிகா காமராஜ்Jan 9, 2023 - 03:24:34 PM | Posted IP 162.1*****
+919994237197
தீபிகா காமராஜ்Jan 9, 2023 - 03:24:22 PM | Posted IP 162.1*****
உண்மை. நானும் திருநங்கை தான் ஆனால் இன்று சமுதாயத்தில் நான் பெண் காவலராக பணி புரிகிறேன். எங்கு சென்றாலும் திருநங்கைகள் சந்திக்கும் பிரச்சினைக்கு அளவு இல்லை யாரோ ஒருவர் செய்யும் தவறு ஒட்டுமொத்த திருநங்கைகளையும் பாதிக்கிறது. ஆகவே இவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படு செய்ய வேண்டும் என்று கூறுகிறேன்.
ராமநாதபூபதிJan 9, 2023 - 02:38:11 PM | Posted IP 162.1*****
உங்களுக்கு பிரச்னை உங்க கூட்டத்துல உள்ளவங்களால தான் வருது. அவங்கள கண்டிச்சு ஒழுங்கா இருக்க சொன்னா பிறகு ஏன் பிரச்னை வருது. கொடுக்குறதை வாங்கிட்டு போனா யாருக்கும் தொந்தரவு இல்ல. அடாவடி கந்துவட்டி வசூல் மாதிரி பண்ணுனா இப்படித்தான்
Emmanuel GunasinghJan 9, 2023 - 01:04:00 PM | Posted IP 162.1*****
திருநங்கைகளுக்கு என அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது பல்வேறு சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்படுகிறது அரசு சார்ந்த சகி அமைப்பு மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டு திருநங்கைகளுக்கு ஆலோசனைகள் உதவிகள் வழங்கி வருகிறது மற்றும் சுய தொழில் செய்து பல திருநங்கைகள் சாதனை செய்து வருகின்றனர் அவர்கள் சமூகத்தில் மதிக்கத்தக்க தங்கள் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்தி நல்ல நிலையில் உயர்ந்து வருகின்றனர் என்பது யாராலும் மறுக்க முடியாது. கை கால் இல்லாத பலர் கூலி வேலைகள் செய்து பிழைப்பு நடத்துகின்றனர் கடவுள் திருநங்கைகளை அப்படி படைக்கவில்லை தண்டிக்கவும் இல்லை எனவே யாசகம் எடுத்து அதன் மூலம் பொது மக்களின் வெறுப்பை சம்பாதிப்பது மற்றும் வன்முறையில் ஈடுபடுவது இது போன்ற செயல்கள் செய்யும் திருநங்கைகளை காவல்துறை தன் கடமையை செய்திருக்கிறது என்பதுதான் நிதர்சனம். சமூக அக்கறையோடு தமிழ் சேவகன்.
மேலும் தொடரும் செய்திகள்

சிறுபான்மையினருக்கு கடனுதவி: ஆட்சியர் தகவல்!
புதன் 1, பிப்ரவரி 2023 12:21:28 PM (IST)

ஆடு திருடிய 3பேர் கைது : ஆட்டோ பறிமுதல்!
புதன் 1, பிப்ரவரி 2023 12:06:28 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: 3 பேர் கைது
புதன் 1, பிப்ரவரி 2023 12:03:16 PM (IST)

பிசி, எம்பிசி மக்களுக்கு ரூ.15லட்சம் வரை கடன் உதவி : ஆட்சியர் தகவல்!
புதன் 1, பிப்ரவரி 2023 11:52:39 AM (IST)

ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் வாழ்த்து!
புதன் 1, பிப்ரவரி 2023 11:43:58 AM (IST)

தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டி பிறந்த நாள் விழா
புதன் 1, பிப்ரவரி 2023 11:02:00 AM (IST)

[email protected]Jan 11, 2023 - 11:38:11 PM | Posted IP 162.1*****