» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி ஆசிரியர்கள் திடீர் சாலைமறியலால் பரபரப்பு

சனி 3, டிசம்பர் 2022 8:11:18 AM (IST)

கோவில்பட்டியில் மினி பஸ்களை பள்ளி முன்பு நிறுத்த எதிர்ப்பு தெரிவித்து பள்ளி ஆசிரியர்கள் திடீர் சாலைமறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டி கடலையூர் ரோடு வழியாக வரும் மினி பஸ்கள் பள்ளி வாசல் முன்பு நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குவதை தடுக்க வலியுறுத்தி புது ரோட்டில் உள்ள நகரசபை நடுநிலைப்பள்ளி முன்பு நேற்று காலையில் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் ஆசிரியர்கள், ஆசிரியைகள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு உதவி கலெக்டர் மகாலட்சுமி, கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் ஆகியோர் சென்று மறியலில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பள்ளி முன்பு மினிபஸ்களை நிறுத்துவதற்கு தடை விதித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, ஆசிரியர் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.


மக்கள் கருத்து

சரியான போராட்டம்Dec 4, 2022 - 02:11:05 PM | Posted IP 162.1*****

மினி பஸ் டிரைவர்கள் கண்டக்டர்கள் முக்கால்வாசி பொறுக்கியாக இருப்பார்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory