» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.515.72 கோடியில் புதிய குடிநீர் திட்டம்: அரசாணை வெளியீடு

வெள்ளி 2, டிசம்பர் 2022 7:54:11 AM (IST)

ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.515.72 கோடி செலவில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் 2 கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கோவில்பட்டி, புதூர் மற்றும் விளாத்திகுளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 136 பஞ்சாயத்துகளை சேர்ந்த 363 கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தபடுகிறது.

தற்போது இந்த 363 கிராமங்களுக்கும் ஏற்கனவே உள்ள 6 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் 6.69 எம்.எல்.டி குடிநீரும், உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் 2.97 எம்.எல்.டி குடிநீரும் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், இது போதுமானதாக இல்லை என்பதால் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் அகரம் கிராமம் அருகே நீர் உறிஞ்சு கிணறு மற்றும் பம்பிங் ஸ்டேசன் அமைத்து 16.57 எம்.எல்.டி தண்ணீர் எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், சேதுராமலிங்கபுரத்தில் 16.57 எம்.எல்.டி திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 363 கிராமங்களில் உள்ள 3.05 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் புதிதாக 92 ஆயிரத்து 407 வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கான மொத்த திட்ட மதிப்பீடு ரூ.515.72 கோடியாகும். இதில் தமிழக அரசின் பங்களிப்பு ரூ.236.545 கோடி, மத்திய அரசின் பங்களிப்பு ரூ.236.545 கோடி, மக்கள் பங்களிப்பு ரூ.7.37 கோடி என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory