» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆற்று மணல் கடத்திய 3 பேர் கைது: சரக்கு வாகனம், பைக் பறிமுதல்!

செவ்வாய் 29, நவம்பர் 2022 5:03:18 PM (IST)

ஆழ்வார்திருநகரி அருகே சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தியதாக 3பேரை போலீசார் கைது செய்து, சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் திருக்கோளூர் கிராம நிர்வாக அலுவலரான கோவிந்தசாமி மற்றும் வருவாய் துறையினர் நேற்று ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநெல்வேலி - திருச்செந்தூர் ரோடு பகுதியில் உள்ள ஆத்தூரங்கால் பாலம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் ராஜபதி பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் பாலசுப்பிரமணியன் (எ) ராஜ் (32), குருகாட்டூர் பகுதியை சேர்ந்த அழகு சுப்பிரமணியன் மகன் முத்துக்குமார் (32) மற்றும் பேரூர் பகுதியை சேர்ந்த முத்து பலவேசம் மகன் முத்து சிவா (20) ஆகிய 3 பேர் சரக்கு வாகனத்தில் சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார்.

அவர்களிடமிருந்த ஒரு யூனிட் ஆற்று மணல், மணல் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பாலசுப்ரமணியன் (எ) ராஜ் மீது ஏற்கனவே ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், குரும்பூர் காவல் நிலையத்தில் மணல் திருட்டு உட்பட 3 வழக்குகளும் என 5 வழக்குகளும், முத்துக்குமார் மீது ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் மணல் திருட்டு உட்பட 2 வழக்குகளும், குரும்பூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 3 வழக்குகள் உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory