» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் முன்விரோதத்தில் பஞ்.,தலைவர்- மகனுக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது

வெள்ளி 25, நவம்பர் 2022 4:17:57 PM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே தேர்தல் முன் விரோதத்தில் பஞ்சாயத்து தலைவர், அவரது மகனைஅரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள அக்காநாயக்கன் பட்டியில் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் அய்யாதுரை (60). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கும் நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. தற்போது ரஞ்சித் சென்னையில் ஒப்பந்த வேலைகள் செய்து வந்தார். அக்காநாயக்கன்பட்டிக்கு வேறு வழக்கு விசாரணைக்காக நேற்று மாலை வந்துள்ளார்.

நேற்று அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த அய்யாதுரை அவரது மகன் கலாநிதி (40) ஆகியோரிடம் ரஞ்சித் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டினாராம். இதில் பலத்த காயம் அடைந்த அய்யாதுரை, கலாநிதி ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக அவர்கள் அளித்த புகாரின் பேரில் புளியம்பட்டி போலீசார் ரஞ்சித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ரஞ்சித் மீது ஏற்கனவே புளியம்பட்டி காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உட்பட 5 வழக்குகளும், மணியாச்சி காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கும் என 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory