» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்து மாணவன் பரிதாப சாவு

வெள்ளி 25, நவம்பர் 2022 10:42:03 AM (IST)

திருச்செந்தூரில் கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முத்துமாலையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் மணிகண்டன் (13), அங்குள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலையில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது சாலையோரத்தில் உள்ள கழிவு கால்வாயில் தவறி விழுந்தான். 

அப்போது மணிகண்டனுக்கு வலிப்பு ஏற்பட்டு உடனடியாக மீண்டு வரமுடியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நீரில் மூழ்கிய மாணவனை அப்பகுதியினர் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகாபாய் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads










Thoothukudi Business Directory