» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நகைக்காக மூதாட்டி கொலை : இளஞ்சிறார் கைது!

வெள்ளி 25, நவம்பர் 2022 10:16:39 AM (IST)

தூத்துக்குடியில் நகைக்காக வீடுபுகுந்து மூதாட்டியை கொடூரமாக தாக்கி கொலை செய்த வழக்கில் இளஞ்சிறார் ஒருவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி முள்ளக்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் ராசம்மாள் (81). ஓய்வுபெற்ற ஆசிரியை. இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் ராசம்மாள் தனியாக வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இரவு மர்மநபர் இவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ராசம்மாளின் தலையில் செங்கலால் கொடூரமாக தாக்கி,  அவர் காதை அறுத்து அவர் அணிந்திருந்த ஒரு பவுன் கம்மல் மற்றும் 2 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றுவிட்டார்.

இதில் படுகாயம் அடைந்த ராசம்மாள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் இறந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் கொலை வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த இளஞ்சிறார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்காக மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட  சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

NameNov 25, 2022 - 03:35:20 PM | Posted IP 162.1*****

Athu yenna ilam sirar kanja kudukki naikal thana athu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory