» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நவ.26, 27ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

வியாழன் 24, நவம்பர் 2022 5:16:32 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில்  வருகிற 26 மற்றும் 27ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம், ஆதார் எண் இணைத்திட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2023 பணியானது 09.11.2022 முதல் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வாக்காளர்களிடமிருந்து மனுக்கள் பெற்று வருகின்றனர். மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. 

நமது மாவட்டத்தில் இதுவரை 61 சதவிகிதம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்திடவும் மனுக்கள் பெற்றிட 26.11.2022 (சனிக்கிழமை) மற்றும் 27.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. 

மேற்படி சிறப்புமுகாம் நாட்களில் காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி முடிய மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் விண்ணப்பங்களை அளிக்கலாம். 01.01.2023 அன்று 18 வயது நிறைவடைந்தவர்கள் அதாவது 31.12.2004 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம்.  இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனு அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரினை சேர்க்க படிவம்-6, பெயரினை நீக்கம் செய்திட படிவம்-7, ஏற்கனவே உள்ள பதிவுகளில் திருத்தம் செய்திட, வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம் செய்திட மற்றும் வேறு சட்டமன்ற தொகுதியில் உள்ள பதிவினை தற்சமயம் வசிக்கும் முகவரிக்கு மாற்றம் செய்திடவும் படிவம்-8 அளித்திட வேண்டும். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைத்திட படிவம்-6டீ அளிக்கவேண்டும். மேலும் www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter helpline என்கிற மெபைல் செயலி மூலமாகவும் உரிய ஆவணங்களுடன் பொது மக்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திடலாம்.

வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணியில் பெறப்படும் விண்ணப்பங்கள்; அனைத்தும் பரிசீலனை மற்றும் கள ஆய்வு செய்யப்பட்டு ஜனவரி, 2023 ம் மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி மற்றும் சிறப்பு முகாம் நாட்களில் பொதுமக்கள் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களையோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண். 1950 னை தொடர்பு கொண்டு தங்களது சந்தேகம், கோரிக்கை தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads










Thoothukudi Business Directory