» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை

வியாழன் 24, நவம்பர் 2022 3:21:34 PM (IST)

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது.

நாளை மறுநாள் (26-ம் தேதி) தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பு பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து மாநகர தி.மு.க. சார்பில் தூத்துக்குடி கலைஞர் அரங்கிலும், கோவில்பட்டி நகரம் சார்பில் வேலாயுதபுரத்திலும் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

27-ம் தேதி ஆதரவற்றோர் இல்லம் மற்றும் பி அண்ட் டி முதியோர் இல்லங்களில் மதிய உணவு வழங்கப்படுகிறது. தொடர்ந்து, 27-ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. பின்னர் எட்டையபுரம் மனநல காப்பகம், நாகலா–புரம் முதியோர் இல்லங்களில் மதிய உணவு வழங்கப்படுகிறது.

28-ம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரம், பாண்டவர்மங்கலம், நாலாட்டின்புதூர் ஆகிய பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், விளாத்திகுளத்தில் மரக்கன்றுகள் நடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

29-ம் தேதி கயத்தாறு, செட்டிக்குறிச்சி, கழுகுமலை ஆகிய இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. 30-ம் தேதி புதூர், குறுக்குசாலை ஆகிய பகுதிகளில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தொடர்ந்து 28,29 மற்றும் 3-ம் தேதிகளில் பல்வேறு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. தி.மு.க. வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

நாட்டின் சாபக்கேடுNov 26, 2022 - 10:48:15 AM | Posted IP 162.1*****

நம் நாட்டில் தலைமுறை தலைமுறைகளாக குடும்ப பிள்ளைகள் எல்லாம் அரசியலுக்கு வருகிறார்கள்?

KumarNov 25, 2022 - 07:55:34 AM | Posted IP 162.1*****

தொடர்ந்து விளாத்திகுளம் பகுதி புறக்கணிக்கபடுகிறது்்்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory