» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை : பாஜக கோரிக்கை!!

வியாழன் 24, நவம்பர் 2022 3:16:10 PM (IST)

நாசரேத் பகுதியில் குடிநீரை திருட்டுத்தனமாக மோட்டார் வைத்து உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக நகர தலைவர் பார்த்தசாரதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நாசரேத் தேர்வுநிலை பேரூராட்சி நிர்வாக அதிகாரிக்கு அனுப்பியுள்ள மனுவில் "நாசரேத் தேர்வு நிலை பேரூராட்சிப் பகுதியில் குடியிருப்பவர்களில் பலர் குடிநீர் இணைப்பு வைத்திருப்பவர்கள். இவர்களில் பலருக்கு குடிநீர் சரிவர கிடைப்பதில்லை. அதற்கு காரணம் பெரும்பான்மையானவர்கள் மின் மோட்டார் வைத்து குடிநீரை திருட்டுத் தனமாக மனசாட்சியே இல்லாமல் அபகரித்துக் கொண்டிருக்கின்றார்கள். 

தாங்கள் காவல்துறை உதவியுடன் அதிரடி நடவடிக்கை எடுத்து மின் மோட்டார்களை  பறிமுதல் செய்வதோடு அல்லாமல் நிரந்தரமாக அவர்களது குடிநீர்  இணைப்பை துண்டிக்க ஆவண செய்ய வேண்டும். பேரூராட்சியிலுள்ள மக்கள் அனைவருக்கும் சரிசமமாக குடிநீர் பெறுவதற்கு வழிவகை செய்யவேண்டும்" என பாஜக நகர தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory