» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துறைமுகம் கடற்கரையில் ஒதுங்கிய ஆமை

வியாழன் 24, நவம்பர் 2022 3:06:56 PM (IST)



தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் ஆமை கரை ஒதுங்கியது.

தூத்துக்குடி புதிய துறைமுகக் கடற்கரையில் அரிய வகை ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது கிடந்தது. இதுதொடா்பாக மீனவா்கள் உயிா்க்கோள காப்பக வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். தூத்துக்குடி வனச் சரக அலுவலா் ஜினோபிலெசில் தலைமையில் வனவா் மதன்குமாா், வனக் காவலா் பாலாஜி, முல்லைக்காடு உதவி கால்நடை மருத்துவா் ஜான்தாமஸ் உள்ளிட்டோா் வந்து ஆய்வு செய்தனா்.

அந்த ஆமை மன்னாா் வளைகுடா பகுதியில் காணப்படும் நான்கு முக்கிய இனங்களில் ஒன்று என்பதும், 80 கிலோ எடையுள்ள பச்சை ஆண் ஆமை என்பதும் தெரியவந்தது. பிரேதப் பரிசோதனைக்கு பின்னரே அதன் இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital






Thoothukudi Business Directory