» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து சேவை துவக்கம்: பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்பு!

வியாழன் 24, நவம்பர் 2022 11:56:31 AM (IST)



கோவில்பட்டியில் இருந்து வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வரை வந்து செல்லும் புதிய பேருந்து சேவையை எம்.சி.சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சங்கம்பட்டி வரை வந்து சென்று கொண்டிருந்த பேருந்தை வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வரை இயக்க வேண்டும் என மணியாச்சி கிராம சுற்றுவட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மக்களி்ன் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி கோட்ட மேலாளர் அழகிரிசாமி கோவில்பட்டி பணிமனை கிளை மேலாளர் ஜெகநாதன், கோவில்பட்டி தொமுச செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மாடசாமி, மணியாச்சி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா, அக்காநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அய்யாதுரை, மணியாச்சி கிளை செயலாளர்கள் தம்பான், ரத்தினவேல், மணியாச்சி கிளை பிரதிநிதிகள் பேச்சிபாண்டி, குமார், அய்யாத்துரை பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

கார் மோதி முதியவர் பலி: டிரைவர் கைது

செவ்வாய் 3, அக்டோபர் 2023 11:05:01 AM (IST)

Sponsored Ads




Arputham Hospital









Thoothukudi Business Directory